அக்டோபர் 2, 2013 இல், ஞானத்திரள், அருள்மிகு கமலவிநாயகர் சத்சங்கம் மற்றும் புரசைத் திருநெறிக் கழகம் பேராதரவுடன் ICF திரு வேங்கடேஸ்வரா மகா மண்டபத்தில் மிகச் சிறப்பாக திருப்புகழுக்கு மாநாடு எடுத்தது.
விழாவில் மயிலை கபாலீச்சுரர் திருக்கோயில் ஓதுவார் சிவத்திரு பா.சற்குருநாத்தேசிகர் மற்றும் பெரும்பாண நம்பி மா.கோடிலிங்கம் திருப்புகழ் இசைக்க ஆசிரியர் விளக்கம் அளித்தார்கள். முன்னதாகத் திருமதி சந்திரா சிவகுமார் இறைவணக்கம் பாட, திருமதி லட்சுமி சிவகாமி வரவேற்புரை வழங்கினார்கள்.