பதிப்பாசிரியர்

கயிலைப் புனிதர் இரா.அருணாசலம்

திருக்கயிலாய யாத்திரை பல முறை, தான்மட்டுமன்றி தம்மைச் சார்ந்தரையும் அழைத்துச் சென்று மகிழ்வித்து மகிழ்கின்றவர். திரு இரா.அருணாசலம் ஐயா அவர்கள். தம்முடைய அருள் அனுபவங்களை தம்முடைய நூலாம் ஆனந்தக் கயிலாயத்தில் பகிர்ந்துகொண்டவர். சைவ சமய நெறிமுறைகள் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்கின்ற பொறுப்புணர்வில் ஞானத்திரள் சைவ சமய இதழை பொருட் செலவை பொருட்படுத்தாது அருட் பயிரை வளர்த்து வருகிறவர்.